தேசிய செய்திகள்

நாட்டு பசுக்களை பாதுகாக்கும் கொள்கை வரைவு கூட்டத்தில் கலந்து கொள்ள 11 மாநிலங்களுக்கு உத்தரவு

நாட்டு பசுக்களை பாதுகாக்கும் தேசிய கொள்கை ஒன்றை வகுக்க நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும்படி 11 மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாட்டு பசுக்கள் அழிந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக அஸ்வினி குமார் என்ற வழக்கறிஞர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளார்.

உள்நாட்டு பசுக்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து உள்ளதுடன் இந்திய பசுக்களுக்கு மாற்றாக ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருந்து கலப்பின பசுக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள சுற்று சூழல் அமைச்சகம் மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களுடன் கூட்டம் நடத்தி இவ்விவகாரத்தில் பொது கொள்கை ஒன்றை உருவாக்கும்படி தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதில் மேற்கு வங்காளம், அருணாசல பிரதேசம், அசாம், கோவா, ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மேகாலயா, மிசோரம், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய 11 மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. சில மாநிலங்கள், செயற்திட்டம் பற்றி அமைச்சகத்திடம் அறிக்கையும் சமர்ப்பித்துள்ளன.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதேந்தர் குமார் தலைமையிலான அமர்வு இந்த 11 மாநில அரசுகளும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது. சுற்று சூழல் மற்றும் வன அமைச்சக பிரதிநிதி ஒருவரும் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

கேரளாவில் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை நாட்டு பசுக்களின் எண்ணிக்கை 80 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் அவை அழிந்து விடும் சூழ்நிலை உள்ளது என்ற தகவலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை