தேசிய செய்திகள்

வங்கிகளில் மோசடி செய்தவர்களை விடமாட்டோம்: மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி

வங்கிகளில் மோசடி செய்தவர்களை விடமாட்டோம் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். #ArunJaitley #PNBfraud

தினத்தந்தி

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த சூழலில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற கண்டறிவதல் தணிக்கை அதிகாரிகள் தோல்வி அடைந்துவிட்டனர் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருண் ஜெட்லி கூறியதாவது:- வங்கியில் நடைபெற்ற மோசடியை உரிய நேரத்தில் கண்டறிய வங்கி நிர்வாகம் தவறி விட்டது. விதிமுறைகள் மீறலை கண்டறிய தணிக்கையாளர்களும் தவறிவிட்டனர். இனி இது பேன்ற மேசடிகளை முன்கூட்டியே கண்டறிய உரிய நடைமுறைகளை கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்க வேண்டும். மோசடி செய்தவர்களை விட்டுவிடமாட்டோம் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு