தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் ஆட்டோ-பேருந்து மோதல்: 17 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் ஆட்டோ மற்றும் பேருந்து மோதி கொண்ட சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கான்பூர்,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், கான்பூர் நகரில் சச்சேண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆட்டோ ஒன்றுடன் திடீரென மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று காயங்களுடன் போராடியவர்களை மீட்டு ஹாலெட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...