திருவனந்தபுரம்,
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
இதில், நீதி துறையில் சிறந்து விளங்கியதற்காக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான சதாசிவம் தேர்வு செய்யப்பட்டார். அவர் விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் கேரள ராஜ்பவன் அதிகாரி சாந்தி அந்த விருதினை பெற்று கொண்டார்.