தேசிய செய்திகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் அயோத்தி விமான நிலையத்துக்கு ராமர் பெயர் சூட்ட முடிவு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலும், மசூதியும் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு அதிகரிக்கப்போகும் பக்தர்கள் வரத்தை கருத்தில்கொண்டு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

அதை பின்னர் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபையில் 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி சுரேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்தார். அதில், அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதற்கு மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு