தேசிய செய்திகள்

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாச்-7ம் தேதி அயோத்தி பயணம்

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மாச்-7ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனாகட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே மாச் 7-ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளா.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில், மார்ச் மாதம் 7-ம் தேதி மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்திக்கு செல்கிறார். . உத்தவ் தாக்கரே பதவியேற்று வரும் மாச் 7-ம் தேதியுடன் 100 நாள்கள் முடிவடைய உள்ளது. அன்று ராமர் கோவில் வழிபாடு செய்யும் உத்தவ்தாக்கரே, மாலையில் சரயு நதிகரையில் நடைபெறும் ஆரத்தி விழாவிலும் கலந்து கொள்கிறார்.

நேற்று முன்தினம் டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி , உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தார் என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்றபின், அயோத்திக்கு அவா செல்ல இருக்கும் முதல் பயணம் இதுவாகும்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை