தேசிய செய்திகள்

அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார்: மகள் நந்தனா தகவல்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் (89) நலமுடன் உள்ளார் என அவரது மகள் நந்தனா தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என செய்திகள் காட்டுத்தீ போல் பரவின. சமூகவலைதளங்களில் அமர்த்தியா சென் காலமானதாக தகவல் வெளியான நிலையில், அவரது மகள் நந்தனா தேவ் சென் மறுப்பு தெரிவித்து தனது தந்தை நலமாக உள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி ஆனால் அது போலியான செய்தி. பாபா (அமர்த்தியா சென்) நலமாக இருக்கிறார். எப்போதும் போல் அவர் பிசியாக இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு