தேசிய செய்திகள்

யானையை கொடூரமாக தாக்கிய பாகன் - வலியால் துடிதுடித்த காட்சி

கேரளாவில் பெண் யானையின் தலையில், பாகன் பயங்கரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தினத்தந்தி

திருவம்பாடி,

கேரளாவில் பெண் யானையின் தலையில், பாகன் பயங்கரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கேரளா மாநிலம் திருவம்பாடி தேவசத்திற்கு சொந்தமான லட்சுமி எனும் பெண்யானை உள்ளது. ஆற்றில் குளிக்க வைத்துவிட்டு கோயிலுக்கு யானையை பாகன் அழைத்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது, யானை நடக்கும் வேகம் குறைந்ததால், பாகன் தனது கையில் வைத்திருந்த தோட்டியை வைத்து யானையின் தலையிலேயே பயங்கரமாக தாக்கியுள்ளார்.

யானை வலி தாங்க முடியாமல் சத்தமிடுவதை, சிலர் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், பாகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது