தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு

ஹெலிகாப்டர் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீனை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் இருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். மற்றொரு இடைத்தரகரான துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவும் நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.

அவர் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதால், தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 14-ந் தேதி அவருக்கு 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி அரவிந்த் குமார், சக்சேனாவின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று எய்ம்ஸ் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி அரவிந்த் குமார், ராஜீவ் சக்சேனாவின் இடைக்கால ஜாமீனை 25-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்