புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், மும்பை, கர்நாடக, ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் டெல்லியிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,
டிசம்பர்31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த நேரங்களில், பொது இடங்களில் கூடி புத்தாண்டை கொண்டாட, வாழ்த்து தெரிவிக்க, கூட்டமாக கூடக்கூடாது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.