தேசிய செய்திகள்

ஆந்திராவில் அரசு பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளுக்கு அனுப்ப தடை

ஆந்திராவில் அரசு பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளுக்கு அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் பள்ளிக் கல்வியின் தரம் குறைவாக உள்ளதால், இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கு வெளியே இதர பணிகள் அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு இதர பணிகளுக்கு ஆசியர்களை அனுப்ப தடை ஆந்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது.

இதற்காக ஆந்திர பிரதேச இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் தனி உதவியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டிருந்த ஆசியர்கள் அனைவரையும் பள்ளிக் கல்வித் துறை திரும்பப் பெற்றுள்ளது.

பள்ளிக் கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் 3ஆம் வகுப்பு மாணவர்களில் 22.4 சதவீத்தினர் மட்டுமே பாட நூலை படிக்கும் திறன் கொண்டுள்ளதாக கல்வி தரம் பற்றிய வருடாந்தர ஆய்வறிக்கை கூறியுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்