தேசிய செய்திகள்

கொள்ளையன் தப்பியோட்டம்: 6 போலீசார் பணியிடை நீக்கம் உத்தரபிரதேச அரசு அதிரடி

கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைத்தொடர்பு ஊழியர் ஒருவரிடம் ரூ.1.21 லட்சத்தை கொள்ளையடித்தார்.

தினத்தந்தி

நொய்டா, 

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ராஜீவ் என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைத்தொடர்பு ஊழியர் ஒருவரிடம் ரூ.1.21 லட்சத்தை கொள்ளையடித்தார். இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டு, அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு பல போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தபோதும் கொள்ளையன் ராஜீவ், திடீரென தப்பி ஓடிவிட்டார். இது போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு பெண் உள்பட 3 போலீஸ்காரர்கள் என 6 பேரை அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்