புதுடெல்லி,
தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள பானி புயல் தீவிரம் அடைந்து வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புயல் காரணமாக உருவான சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் பேசினேன். முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், மக்களுக்கு உதவிகள் வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன். அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்தினேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.