தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது; பொதுமக்கள் பாதிப்பு

நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டது. இதற்காக, இன்றும் நாளையும் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.

இதன்படி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர், பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை சுமந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

வார முதல் நாளான (திங்கட்கிழமை) இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மாதத்தின் 2வது சனிக்கிழமை. நேற்று ஞாயிற்று கிழமை. எனவே, கடந்த 2 நாட்கள் விடுமுறையுடன், இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாத நிலையில் 4 நாட்கள் பணபுழக்கம், வங்கி பரிவர்த்தனைகள் இன்றி பொதுமக்கள் அதிகம் திண்டாடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு