தேசிய செய்திகள்

வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா - வங்கி ஊழியர் சங்கம் முடிவு

வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா நடத்த வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நாடாளுமன்றம் முன்பு வருகிற 20-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், வங்கி இணைப்பை கண்டித்து வருகிற 20-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் முன்பு தர்ணா நடத்தப்படும். அன்றைய தினமே மத்திய மந்திரி நிர்மலாசீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்