அவுரங்காபாத்,
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார்மயத்தை எதிர்த்து டெல்லியில் டிசம்பர் 10-ந் தேதி வங்கி பணியாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்க இணை செயலாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கார் கூறுகையில், வங்கிகள் இணைப்பு மூலம் அவற்றை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இதனால் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள்தான் மறைமுகமாக பலன் அடைவார்கள். கடன் தள்ளுபடியால் அதிகம் பலன் அடைந்தது, தொழிலதிபர்கள்தான் என்றார்.