தேசிய செய்திகள்

சித்தராமையாவுடன் பசவராஜ் பொம்மை செல்போனில் பேச்சு; கூடுதல் பாதுகாப்பு வழங்குவதாக உறுதி

சித்தராமையாவுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை செல்போனில் பேசினார்.

தினத்தந்தி

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். உங்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் இருந்தால் அதுபற்றி தகவல் கொடுத்தால் முழுமையாக விசாரிப்பதாக கூறினேன். மேலும் முட்டை வீச்சு சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் யாரும் கருத்துகளை கூறக்கூடாது.

அதே போல் யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை