தேசிய செய்திகள்

17 பேர் பலியான டெல்லி தீ விபத்து; 7 பேர் மீது 800 பக்க குற்றச்சாட்டு அறிக்கை பதிவு

டெல்லியில் 17 பேரை பலி கொண்ட பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் அதன் உரிமையாளர் உள்பட 7 பேர் மீது இன்று 800 பக்க குற்றச்சாட்டு அறிக்கை பதிவு செய்யப்பட்டது. #FireAccident

புதுடெல்லி,

டெல்லியின் பாவனா பகுதியில் இரண்டடுக்கு கட்டிடம் ஒன்றில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. கடந்த ஜனவரி 20ந்தேதி அதன் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மொத்த கட்டிடமும் எரிந்து போனது.

இந்த தீ விபத்தில் 10 பெண்கள் உள்பட 17 பேர் பலியாகினர். ஆண் மற்றும் பெண் என 2 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் மனோஜ் ஜெயின் மற்றும் இணை உரிமையாளர் லலித் கோயல் மற்றும் 5 பேர் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது 800 பக்க குற்றச்சாட்டு அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதில் சுர்ஜீத் கோயல், கிரீஷ் ரத்தோர், சங்கீதா விஜய் யாதவ், உமா மிட்டல் மற்றும் பிரிஜ் பூஷண் சூட் ஆகியோர் மற்ற 5 பேர் ஆவர். இவர்கள் அனைவருக்கும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு உள்ளது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரும் ஏப்ரல் 4ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை