தேசிய செய்திகள்

பிச்சை எடுத்த 21 குழந்தைகள் மீட்பு

பெங்களூருவில் பிச்சை எடுத்த 21 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு நகரில் உள்ள முக்கிய சாலைகளின் ஜங்ஷன்களில் குழந்தைகளை வைத்து கொண்டு வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுப்பது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைப்பினர் இணைந்து நகரில் உள்ள முக்கிய சாலைகளில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது 10 பெண்கள் சிக்கினார்கள். அவர்கள் வசம் இருந்து 9 பச்சிளம் குழந்தைகள், 7 சிறுவர்கள் உள்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகள், சிறுவர்களை வைத்து அந்த பெண்கள் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்தது தெரிந்தது. மீட்கப்பட்ட குழந்தைகளை பாதுகாப்பு மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை