தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் - அதிர்ச்சி சம்பவம்

டாக்டர் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தோல் நோய் டாக்டர் பிரவீன் (வயது 56). இவர் பெங்களூருவில் தனியே கிளினிக் வைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த கிளினிக்கிற்கு கடந்த 18ம் தேதி தோல் சிகிச்சைக்காக 21 வயதான இளம்பெண் வந்துள்ளார். அப்போது சிகிச்சைக்கு வந்த இளம்பெண்னுக்கு டாக்டர் பிரவீன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கிளினிக்கில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும், தனக்கு நடந்த சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்