தேசிய செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் திடீர் ராஜினாமா

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினமா செய்தார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்தார். இந்த நிலையில், சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் ரமேஷ்குமார் ஒப்படைத்தார்.

ரமேஷ்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். ரமேஷ்குமார் சபாநாயகர் பதவியில் இருந்து விலகாவிட்டால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில், ரமேஷ்குமார் தானாகவே பதவி விலகியுள்ளார். குமாரசாமி ஆட்சியில் 14 மாதம் 4 நாட்கள் சபாநாயகராக ரமேஷ்குமார் பதவி வகித்தார்.

பாஜகவை சேர்ந்த கே.ஜி.போபய்யா புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு