தேசிய செய்திகள்

பெங்களூரு: கெம்பேகவுடா வெண்கல சிலை - நவம்பர் 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா வெண்கல சிலையை நவம்பர் 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேவுடாவுக்கு 108 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் திறப்பு விழா வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமியை உயர்கல்வித்துறை மந்திரி பெங்களூருவில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை அவர் கேட்டு பெற்றார். மேலும் அவர் 20-க்கும் மேற்பட்ட ஒக்கலிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சிலை திறப்பு குறித்து கர்நாடகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழிப்புர்ணவு பேரணி வெற்றி பெற வேண்டும் என்று பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளதாக மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்