தேசிய செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் வெறும் கோஷம் மட்டும் வேண்டாம்: ராகுல் காந்தி ஆவேசம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் வெறும் கோஷம் மட்டும் வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். #RahulGandhi

புதுடெல்லி,

காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தர பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் ஆளும் பா.ஜ. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார். இந்த இரு சம்பவங்ளும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் நளளிரவு டில்லி இந்தியா கேட்டில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். அவருடன் பிரியங்கா, ராபர்ட் வாத்ரா, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி கோஷம் எழுப்புகிறார். அது நல்ல கோஷம் தான். வெறும் கோஷம் போட்டால் மட்டும் போதுமா? கீழே இறங்கி வந்து அதை செயல்படுத்தி பெண் குழந்தைகள் வன்முறைக்கு எதிராக சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

இது அரசியல் பிரச்சினை இல்லை, தேசிய பிரச்சினை. இந்த பேரணியில் பல கட்சியினரை நீங்கள் பார்க்க முடியும். பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உணரவேண்டும் என்றார்.