சஹரன்பூர்,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.சி. மெகமூத் அலி, அவரது சகோதரர் முன்னாள் எம்.எல்.ஏ. முகம்மது இக்பால் ஆகியோரின் துப்பாக்கி உரிமங்களை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது. மாவட்ட கலெக்டர் அலோக் பாண்டே கூறும்போது, அவர்களது துப்பாக்கி உரிமம் மட்டுமல்ல, அவர்களது மனைவிகள், இக்பாலின் மகன் ஜாவேத் ஆகியோரின் துப்பாக்கி உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
சகோதரர்கள் இருவர் மீதும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சட்டவிரோத சுரங்க வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.