பாரதியார் 140வது பிறந்த நாள்; சிலைக்கு புதுச்சேரி கவர்னர் அஞ்சலி
புதுச்சேரி சட்டசபை முன் பாரதியாரின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தினத்தந்தி
புதுச்சேரி,
பாரதியாரின் 140வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் (11ந்தேதி) கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி சட்டசபை முன்பு அமைக்கப்பட்டு இருந்த அவரது சிலைக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.