மும்பை,
மும்பையில் இருந்து புவனேஷ்வருக்கு 155 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. பிற்பகல் 2.15 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் விமானி அறையில் இருந்து புகை வெளியானது. இதையடுத்து, விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்துக்கே திருப்ப பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உரிய நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான என்ஜினியர்கள் விமானத்தில் புகை வெளியானதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் பத்திரமாக புவனேஷ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.