தேசிய செய்திகள்

5 நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகை

5 நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகிறார்.

தினத்தந்தி

டெல்லி,

பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். அதன் பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கோ நாளை இந்தியா வருகிறார்.

டெல்லி வரும் ஷேரிங் டோப்கோ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதேபோல், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் டோப்கோ சந்தித்து பேசுகிறார்.

5 நாள் பயணமாக இந்தியா வரும் டோப்கோ தனது பயணத்தின்போது மும்பைக்கும் செல்கிறார். டோப்கேவுடன் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வருகிறது.

"இந்தியாவும் பூடானும் அனைத்து மட்டங்களிலும் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் நட்பு கெண்டு இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?