தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் இந்த வைரஸ், இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசால் இன்று ஒருநாளில் மட்டும் 11 பேர் மராட்டிய மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் பொது போக்குவரத்தைப் பயணத்தை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்று மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி கேட்டுக்கொண்டுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு