தேசிய செய்திகள்

பீகார் தேர்தல்- பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் தாண்டி பாஜக கூட்டணி முன்னிலை

பீகாரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தற்போது 128 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

தினத்தந்தி

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.

இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணும் பணி துவங்கியதில் இருந்தே முன்னிலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் மெகா கூட்டணியும் மாறி மாறி சில சுற்றுக்களில் முன்னிலை பெற்று வருகின்றன. இதனால், எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 128 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது 128 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தேர்தல் முடிவு நிலவரங்கள் இதே நிலையில் நீடிக்குமா? அல்லது டிரெண்டிங் மாறுமா? என்பது இன்னும் சில மணி நேரங்களுக்குப் பிறகே தெளிவாக தெரியவரும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு