தேசிய செய்திகள்

மோடியின் கையை வெட்டவும், கழுத்தை அறுக்கவும் பீகார் மக்கள் தயாராக உள்ளனர் ராப்ரி தேவி சர்ச்சை பேச்சு

பிரதமர் மோடியின் கையை வெட்டவும், கழுத்தை அறுக்கவும் பீகார் மக்கள் தயாராக உள்ளதாக ராப்ரி தேவியின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது

தினத்தந்தி

பாட்னா

பீகாரின் உஜியார்பூர் தொகுதி எம்.பி., நித்யானந்த் ராய், பிரதமர் மோடியை நோக்கி நீட்டப்படும் விரல்களை வெட்டுவோம் எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டார்.

பாட்னாவில் நடந்த கூட்டம் ஒன்றில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி பேசுகையில், மோடியை குற்றஞ்சாட்டுபவர்களின் விரல்களை வெட்டுவோம் என பா.ஜ.,வினர் கூறுகின்றனர். செய்து பாருங்கள். நாட்டு மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பீகார் மக்களும் அமைதியாக இருப்பார்களா?

இங்குள்ள பலர் பிரதமர் மோடியின் கழுத்தை அறுக்கவும், கையை வெட்டவும் தயாராக உள்ளனர். இதற்காக சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளனர்.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை விசாரணை எதுவாக இருந்தாலும், அவர்களை பற்றி எனக்கு தெரியும். நாங்கள் என்ன தவறு செய்தோம். இதற்கு மத்திய மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும். இதற்காக அவர்கள் சம்மன் அனுப்பட்டும்.

என்னிடம் அவர்கள் விசாரணை நடத்த வேண்டுமென்றால், அவர்கள் பாட்னா வந்து தான் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ராப்ரி தேவியின் இந்த பேச்சுக்கு பாரதீய ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து