தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 35-வது இடம்

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 35-வது இடத்தில் உள்ளது. #NEET

புதுடெல்லி,

மே 6-ல் நடந்த நீட் தோவை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா. தமிழகத்தில் 1,14,602 மாணவாகள் நீட் தோவு எழுதியுள்ளனா. தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். 180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து பீகாரை சேர்ந்த மாணவி கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியலில் 180-க்கு 171, வேதியியலில் 180-க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360-க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் ,தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது 39.55 சதவீதம் ஆகும் .தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 12 வது இடம் பிடித்து உள்ளார்.தமிழில் தேர்வு எழுதிய 24,720 பேரில் 1.86 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். உத்தரபிரதேசத்தில் நீட் தேர்வில் அதிகம் தேர்வு அடைந்து உள்ளனர். 76,778 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில், தமிழகம் 35-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 1,14,602 பேர் எழுதிய நிலையில், 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, தேர்ச்சி விகிதத்தில் 40 சதவீதம் ஆகும். தேர்ச்சி விகிதத்தில், 74 சதவீதத்துடன் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. 79,057 பேர் தேர்வு எழுதிய நிலையில், 58,732 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2-வது இடத்தில் 74 சதவீதத்துடன் டெல்லி உள்ளது.

அண்டை மாநிலங்களில், 73 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஆந்திர பிரதேசம் 4-வது இடத்திலும் , 69 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் தெலுங்கானா 7-வது இடத்திலும், 67 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் கேரளா 8-வது இடத்திலும், 64 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் கர்நாடகா 10-வது இடத்திலும் உள்ளது. 40 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் புதுச்சேரி 33-வது இடத்தில் உள்ளது. புதுச்சேரியில், 4462 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 1768 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்