பாட்னா
நேற்று இரவு பீகாரில் உள்ள மசூத ரயில் நிலையத்தில் நகசலலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். முதல் கட்ட தகவலின் நக்சலைட்டுகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தி ரெயில் நிலையத்திற்கு தீவைத்தனர். மேலும் நக்சலைட்டுகள் ரெயில்வே நிலைய உதவி மாஸ்டர் மற்றும் ஒரு ரயில் ஊழியரை கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆனால் அங்கு யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
மண்டல ரயில்வே மேலாளர் மால்டாவுக்கு உதவி ஸ்டேஷ்ன் மாஸ்டர் கடத்தபட்டதாக போன் வந்து உள்ளது. மால்டா ஒரு அழைப்பு வந்தது.மசூதன் பாதையில் தொடர்ந்து ரெயில்கள் இயக்கபட்டால் கடத்தப்பட்ட இருவரையும் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த பாதையில் பயணிக்கும் பயணிகள் மாற்று வழித்தடங்களை பயனபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.மசூதன் ரயில் நிலையத்தில் நக்சல் தாக்குதல் நடத்தியதில், மால்கா பிரிவில் கிளில்-ஜமால்பூர்-பாகல்பூர் பிரிவில் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.