தேசிய செய்திகள்

மாணவர்களின் விடைத்தாள்களை அலட்சியமாக திருத்திய பேராசிரியை - வீடியோ வைரல்

விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சியமாக செயல்பட்டுள்ள பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகம் நிர்வாகம் கூறியுள்ளது.

தினத்தந்தி

பாட்னா,

விடைத்தாள்களை பேராசிரியை ஒருவர் திருத்துவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில் பீகாரில் உள்ள பாடலிபுத்ரா பல்கலைக்கழக தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி நடக்கிறது. அதில் பேராசிரியை ஒருவர் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை படித்து பார்க்காமலேயே தனது பேனாவினால் சரிபார்க்கிறார்.

சில நொடிகளில் விடைத்தாள் பக்கங்களை புரட்டி சரிபார்த்தவாறு மதிப்பெண்களை வழங்குகிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும்நிலையில் 'பேராசிரியை மதிப்பெண் வழங்கும் விடைத்தாள்களுக்கு உரிய மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்' என கருத்துகளை தெரிவித்து வேகமாக பரப்பி வருகிறார்கள்.

இந்தநிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சியமாக செயல்பட்டுள்ள குறிப்பிட்ட பேராசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாடலிபுத்ரா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்