தேசிய செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் வாடும் பீகார் பெண்: சொந்த கிராமத்தை போலீசார் தேடுகின்றனர்

பாகிஸ்தான் சிறையில் வாடும் பீகார் பெண்ணின் சொந்த கிராமத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

பாட்னா,

பாகிஸ்தானில் லாகூரில் உள்ள மத்திய சிறையில் நகேயா (வயது 51) என்ற பெண் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தன் கணவர் பெயர் தாமன், பீகார் மாநிலம் தேரி ஆன் சோனில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல், பீகார் மாநில போலீஸ் தலைமையகம் மூலம் ரோதாஸ் மாவட்ட போலீசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த பெண்ணின் கிராமம் எது, அவரின் உறவினர்கள் யார் என்று தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையமும் ஈடுபட்டுள்ளது.

அந்த பெண்ணின் குணாதிசயம் என்ன? எந்த சூழ்நிலையில் அவர் பாகிஸ்தானை அடைந்தார் என்பதை விசாரித்து அறிந்து பாகிஸ்தானிடம் தெரிவிப்போம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்யவீர் சிங் தெரிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்