தேசிய செய்திகள்

மசோதா ஒப்புதல் விவகாரம்: ஜனாதிபதியின் விளக்க கேள்விகள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஜனாதிபதியின் விளக்க கேள்விகள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது. செப்டம்பர் 11-ந்தேதி இறுதி விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மசோதா ஒப்புதலுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி