தேசிய செய்திகள்

இரு நாட்டு உறவுகளை நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் - பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடக்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி இரு நாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் பிரதமர் மோடி கூறினார்.

அகமதாபாத்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இந்தியாவுக்கு வருகை தந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் சமர்பதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். குரங்கு பொம்மைகள் சொல்லும் பாடம் குறித்து ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கினார். காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப்.

பின்னர் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்திற்கு வந்தடைந்தார் அதிபர் டிரம்ப். அவர்கள் வந்த வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.

சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் .பிரதமர் மோடியும், டொனால்டு டிரமப்பும் மேடைக்கு வந்தனர். நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது.பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தால் நீங்கள் மனதார வரவேற்கப்படுகிறீர்கள். இது குஜராத் ஆனால் உங்களை வரவேற்பதில் முழு நாடும் உற்சாகமாக உள்ளது.

வரலாறு மீண்டும் மீண்டும் திரும்புவதை இன்று நாம் காணலாம் என்று நினைக்கிறேன். 5 மாதங்களுக்கு முன்பு நான் எனது அமெரிக்க பயணத்தை 'ஹவுடி மோடி' உடன் தொடங்கினேன், இன்று எனது நண்பர் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது இந்திய பயணத்தை 'நமஸ்தே டிரம்ப்' உடன் அகமதாபாத்தில் தொடங்குகிறார்.

இந்த நிகழ்வின் பெயரின் பொருள் - 'நமஸ்தே' மிகவும் ஆழமானது. இது உலகின் பழமையான மொழி சமஸ்கிருதத்தில் இருந்து வந்த ஒரு சொல். இது அந்த நபருக்கு மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம் என்பதாகும்.

இந்தியா-அமெரிக்க உறவுகள் இனி மற்றொரு கூட்டு அல்ல. இது மிக பெரிய மற்றும் நெருக்கமான உறவு ஆகும். ஒருவர் 'சுதந்திர சிலை' பற்றி பெருமிதம் கொள்கிறார், மற்றவர் 'ஒற்றுமை சிலை' பற்றி பெருமிதம் கொள்கிறார்.

முதல் பெண்மணி மெலனியா, நீங்கள் இங்கு இருப்பது எங்களுக்கு ஒரு மரியாதை ஆகும் . ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அமெரிக்காவுக்காக நீங்கள் செய்த பணி அதன் பலனைத் தருகிறது. குழந்தைகள் மற்றும் சமூகத்திற்காக நீங்கள் செய்த பணி பாராட்டத்தக்கது.

இரு நாட்டு உறவுகளை இந்த நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும் என கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை