தேசிய செய்திகள்

டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

மும்பையிலிருந்து தலைநகர் டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8.05 மணியளவில் இண்டிகோ விமானம் பயணிகளுடன் தலைநகர் டெல்லி நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிலநிமிடங்களில் அந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது.

இதனால், விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்திற்கே திருப்பப் பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. தொழில்நுட்ப வல்லுனர்கள் விமானத்தை உடனடியாக ஆய்வு செய்தனர்.

முன்னதாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீதும் பறவை மோதியதால், விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியது. பயணிகள் மாற்று விமானத்தில் மும்பைக்கு அனுப்பிவைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை