புதுடெல்லி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு இன்று (புதன்கிழமை) 74 வயது பிறந்த நாளாகும். இந்த நிலையில் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.