தேசிய செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்; பிரதமர் மோடி அஞ்சலி

இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்த தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய விடுதலைக்காக முன்னின்று போராடிய வீரர்களில் ஒருவர் பகத் சிங். இவரது பிறந்த ஆண்டு தின கொண்டாட்டம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், வீரம் நிறைந்த பகத் சிங், ஒவ்வோர் இந்தியரின் மனதிலும் வாழ்ந்து வருகிறார்.

அவரது தைரியமிகு தியாகம், எண்ணற்ற மக்களிடையே நாட்டுப்பற்றுக்கான பொறியை பற்ற வைத்தது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவரது உயரிய கருத்துகளை நினைவுகூர்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை