கோட்டயம்,
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.
இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்கு பிறகு கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பிராங்கோ தற்போது கோட்டயம் மாவட்டம் பலா கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.பேராயர் மூலக்கல்லின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிந்த நிலையில், அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து பலா முதன்மை ஜூடிசியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.