தேசிய செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த காட்டெருமைகள்; கிராம மக்கள் பீதி

மூடிகெரே அருகே சாலையில் காட்டெருமைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

தினத்தந்தி

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பனகல் சாலையில் காடுகத்தே கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டெருமை, காட்டுயானை, கரடி போன்ற வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது அடிக்கடி நடந்து வருகிறது.

இந்தநிலையில் அந்த கிராமத்தின் சாலையில் 5-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா வந்துள்ளன. அதனை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்து அதிச்சி அடைந்த கிராம மக்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்று வனத்துறை அதிகாகள் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். காட்டெருமைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை