புதுடெல்லி,
இந்தியாவில் 5 மாநிலங்களில் 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம், வேட்புமனுத்தாக்கல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் திவீரமாக மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை சந்திக்க, கட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொள்கின்றனர்.