தேசிய செய்திகள்

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி நீக்கம்

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி பிரக்யா நீக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தேச பக்தர் என நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாத்வி பிரக்யா தாகூரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சாத்வி பிரக்யா தாகூர் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், சாத்வி பிரக்யாவின் கருத்து கண்டனத்திற்குரியது. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா தாகூர் நீக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்