புதுடெல்லி,
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை தெலுங்கு தேசம் கட்சி முடக்கியது. இதேவிவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அண்மையில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டு தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ராஜ்ய சபாவில், இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லி உட்பட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தாம் வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு பின்னால் பிரதமராக வருபவர்கள் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என தாம் எதிர்ப்பார்த்ததாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.