தேசிய செய்திகள்

பேஸ்புக்கை கட்டுக்குள் வைத்திருப்பதாக ராகுல் காந்தி விமர்சனம் -பாஜக பதிலடி

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் முகநூல் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காடி ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து இருந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் முகநூல் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காடி ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து இருந்தார். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரையை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவில் வாட்ஸ்அப், முகநூலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது.

சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இறுதியாக முகநூலின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்று கூறியிருந்தார்.

பாஜகவினர் வெறுப்பு பேச்சை கண்டித்தால், நாட்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வணிக வாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாகி கூறியதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தங்களது சொந்த கட்சியில் உள்ள தலைவர்களை கூட காப்பாற்ற முடியாதவர்கள் முழு உலகத்தையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்டுப்படுத்துவதாக கூச்சலிடுகின்றனர்.

இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரவிசங்கர் பிரசாத், தேர்தலுக்கு முன்பாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் பேஸ்புக் உடன் கூட்டணி அமைத்து தரவுகளை பெற்று கையும் களவுமாக பிடிபட்ட நீங்கள், இப்போது எங்களை கேள்விக்குட்படுத்த வேண்டுமா? என்று வினவியுள்ளார்.

ஆனால், இத்தகைய தகவல்களை மறுத்துள்ள பேஸ்புக், அரசியல் மற்றும் கட்சி சார்பற்று கொள்கைகளை மட்டுமே கடைபிடிப்பதாக கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை