தேசிய செய்திகள்

குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது பா.ஜ.க.: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு

பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

சண்டிகார்,

சமீபத்தில் சண்டிகாரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 35 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 14ல் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 12 வார்டுகளிலும், காங்கிரஸ் 8 மற்றும் அகாலி தளம் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. தலைவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆம் ஆத்மி தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் ராகவ் சத்தா கூறும்போது, ஆம் ஆத்மியை சேர்ந்த இரு கவுன்சிலர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், ஒரு கவுன்சிலருக்கு 75 லட்சம் ரூபாயும் தருவதாக பா.ஜ.க. தலைவர்கள் ஆசை காட்டி உள்ளனர். வீட்டுக்கே வந்து பேரம் பேசி உள்ளனர்.

ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உள்ளோம். இனி நேரிலோ, தொலைபேசியிலோ அணுகி பேரத்தில் ஈடுபட்டால் வீடியோ, ஆடியோவை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். எனினும், இதற்கு சண்டிகார் பா.ஜ.க. தலைவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்