தேசிய செய்திகள்

போபாலில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா களமிறக்கம்

போபாலில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா பா.ஜனதா சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்பேது ரம்ஜான் தெழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா தாக்கூர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை 2016 மே மாதம் நீக்கியது. இதனையடுத்தும் விசாரணையை எதிர்க்கொண்டு வருகிறார்.

ஜாமீனில் வெளியே வந்துள்ள சாத்வி பிரக்யா, பா.ஜனதாவில் இணைந்துள்ளார். இதனையடுத்து அவரை மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது