தேசிய செய்திகள்

தேர்தல் வாக்குறுதியை பாஜக மறந்துவிட்டது: அகிலேஷ் யாதவ் விமர்சனம்

உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் வர இருப்பதால் விவசாய சட்டங்களை பாஜக திரும்பப் பெறக்கூடும் என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாக வாக்குறுதி அளித்த பாஜக, அதற்கு பதிலாக நாட்டின் பணவீக்கத்தை இரண்டு மடங்கு ஆக்கிவிட்டதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அகிலேஷ் யாதவ் மேலும் கூறுகையில், பாரதீய ஜனதாவின் தாமரை பொய் மற்றும் வஞ்சகம் என்ற நிலத்தில் வளர்கிறது. பாஜக தனது தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டது. விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலையை பெற முடியவில்லை.

லகிம்பூரில் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் எரிக்கின்றனர். தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா? என விவசாயிகள் அறிய முற்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து யாருமே பதிலளிக்கவில்லை என்றார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்