தேசிய செய்திகள்

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி; அமித்ஷா வாழ்த்து

உத்தர பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, மேயர் பதவிக்கான அனைத்து 17 மாநகராட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று உள்ளது.

இதுதவிர நகராட்சி தலைவர் தேர்தலில் 90 இடங்களிலும் மற்றும் 600 வார்டுகளிலும் அக்கட்சி வெற்றி பெற்று உள்ளது. இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

அந்த செய்தியில், உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக செயலாற்றிய ஒட்டு மொத்த பா.ஜ.க. குழுவினருக்கும், அனைத்து செயல் வீரர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இது யோகி ஆதித்யநாத்ஜியின் வழிகாட்டுதலின் கீழ் நரேந்திரமோடி அரசின் பொதுநல பணிக்கான சாட்சி ஆகும். பா.ஜ.க. மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு மனப்பூர்வ நன்றிகள் என தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி யோகி ஆதித்யநாத் கூறும்போது, 2017-ம் ஆண்டில் பா.ஜ.க. 60 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த ஆண்டில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக அளவிலான வெற்றியை பெற்றிருக்கிறோம் என கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை