தேசிய செய்திகள்

என்னை கண்டு பா.ஜனதா அஞ்சுகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்களுக்கு எல்லா மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் நான் ஜெயிலுக்குப் போன பிறகு 15 நாட்கள் எனக்கு இன்சுலின் கொடுக்கவில்லை என்று கெஜ்ரிவால் பேசினார்.

டெல்லி,  

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், 50 நாள் சிறையில் இருந்த கெஜ்ரிவால் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கெஜ்ரிவால் வாகன பேரணி நடத்தினார். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது: டெல்லி மக்களுக்கு எல்லா மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் நான் ஜெயிலுக்குப் போன பிறகு 15 நாட்கள் எனக்கு இன்சுலின் கொடுக்கவில்லை.

பா.ஜனதாவிற்கு வாக்களித்தால் நான் சிறைக்கு செல்வேன். மக்கள் அனைவரும் ஆம்ஆத்மி கட்சி சின்னத்திற்கு வாக்களித்தால், நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. மார்ச் 16ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. என்னை மார்ச் 21ம் தேதி சிறையில் அடைத்தனர். தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க சதி செய்தனர். இதற்கு அர்த்தம் என்னை கண்டு பா.ஜனதாவினர் பயப்படுகிறார்கள்" என்றார். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு